சீயோன் ஆன்லைன் வேதாகம கல்லூரி

தேவன் கொடுத்த ஊழியத்தின் திட்டப்படி 27 ஆண்டுகளாக மக்களை விடுவிக்கும் ஊழியத்தையும், கிராம ஊழியத்தையும் சிறப்பாக செய்து வரும் சீயோன் சுவிசேஷ ஜெப ஐக்கியத்தால் 2009ம் ஆண்டில் இந்த வேதாகம கல்லூரி கர்த்தருடைய கிருபையால் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊழியத்திற்கு சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டுவதின் தேவையை உணர்ந்த நம் ஊழியத்தலைவர்களின் பாரம் NATA வில் உறுப்பினரானதின் மூலமும், Good News International University உதவியுடனும் நிறைவேறிற்று. இந்த இயக்கங்களின் பாடத்திட்டத்தின்படியும், வழிகாட்டுதலின்படியும் பாடத்திட்டங்கள் நடத்தப்பெற்று பட்டங்கள் (Degrees) வழங்கப்படுகிறது. அவை ஊழிய இயக்கங்களால் மதிப்பையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன.